அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

வெள்ளி, 31 அக்டோபர், 2014

நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்.. !125 வது

நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..!


நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 125-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (14/15..10.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ  தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது.  

விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்  ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை  நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.


ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..!


நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திங்கள், 1 ஜூலை, 2013

30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும்

30/6/2013 புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 13 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.