நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக
கொண்டாட்டம்..!
நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 125-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (14/15..10.2014)
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர்
ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும்
நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு
வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை
சரியாக 5 மணியளவில் தொடங்கியது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி,
பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில்
வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின்
அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான
முறையில் செய்திருந்தனர்.
sahab pvs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக